பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ; அவதானம் மக்களே
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்த மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 4.00 மணி முதல் நாளை (29) பிற்பகல் 4.00 மணி வரையிலான 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை எச்சரிக்கை
கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவு
களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள மற்றும் தொடங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள்
கேகாலை மாவட்டம்: மாவனெல்லை மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகள்
நுவரெலியா மாவட்டம்: நோர்வூட் மற்றும் அம்பகமுவ கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, ஓபநாயக்க, குருவிட்ட, அயகம, எலபாத்த மற்றும் பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவுகள்
முதல் நிலை எச்சரிக்கை
கொழும்பு மாவட்டம்: சீதாவாக்க மற்றும் பாதுக்க பிரதேச செயலகப் பிரிவுகள்
காலி மாவட்டம்: நெலுவ, எல்பிட்டிய, தவலம, நியாகம மற்றும் கரந்தெனிய பிரதேச செயலகப் பிரிவுகள்
களுத்துறை மாவட்டம்: பேருவளை, மில்லனிய, அகலவத்தை, மதுராவல, ஹொரணை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மதுகம மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகள்
கண்டி மாவட்டம்: உடபலாத்த, யட்டிநுவர, பஸ்பாகே கோரளை, உடுநுவர மற்றும் கங்கா இஹல கோரளை பிரதேச செயலகப் பிரிவுகள்
கேகாலை மாவட்டம்: கலிகமுவ, வரகாப்பொல, ருவன்வெல்ல, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, கேகாலை, புலத்கோஹுபிட்டிய, தெஹியோவிட்டை மற்றும் தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுகள் குருநாகல் மாவட்டம்: குருநாகல் பிரதேச செயலகப் பிரிவு
மாத்தறை மாவட்டம்: கொட்டபொல மற்றும் பிட்டபெத்தர பிரதேச செயலகப் பிரிவுகள் நுவரெலியா மாவட்டம்: கொத்மலை மேற்கு மற்றும் கொத்மலை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, நிவித்திகலை, கிரியெல்ல, தொடகவலை, எஹெலியகொட மற்றும் பலங்கொட பிரதேச செயலகப் பிரிவுகள்
தொடர்ந்து சீரற்ற வானிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த எச்சரிக்கைகள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு பாதுகாப்புப் படையினரும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.