கிரிக்கெட் போட்டியில் கோஷமிட்ட இளைஞன் ; மைதானத்திலேயே நடந்த கொடூரம்
கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம் எழுப்பிய இளைஞன் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்தது.
இந்தியாவின் கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பத்ரா கல்லூர்த்தி கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.
வாக்குவாதம்
பத்து அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிக்கான மைதானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த இளைஞன், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று அவரிடம் வாக்குவாதம் செய்தது. இது மோதலாக மாறி அவர்கள் அந்த இளைஞனை உதைத்தும், தடியால் தாக்கியும் உள்ளனர்.
இதனால் உடலின் உட்புறத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இளைஞன் உடலை கைப்பற்றிய கர்நாடக பொலிஸார் இந்த சம்பவத்தில் 15 பேரை கைது செய்துள்ளனர்.