ஹோட்டல் அறையில் இளம் பெண்ணொருவருக்கு நேர்ந்த கொடூரம்!
இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது காதலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம் பிம்ப்ரி சிஞ்சவாத் நகரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு, கடந்த 25ஆம் திகதி ரிஷாப் நிகாம், வந்தனா திவிவேதி என்ற ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது.
இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களை அந்த ஜோடி பகலில் சுற்றிவிட்டு அறைக்கு திரும்பியுள்ளது.
இவ்வாறான நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வந்தனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நிகாம் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ஹோட்டலில் தனது அறையில் சடலமாக குறித்த பெண் கிடந்தது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அவரின் சடலத்தைக் கைப்பற்றிய பொலிஸார், சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, நிகாம் வெளியேறிய காட்சிகள் தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் தப்பியோடிய அவரை பொலிஸார் கைது செய்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நிகாம் தனது காதலி வந்தனாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்துள்ளார்.
அவரை கொலை திட்டமிட்டு துப்பாக்கியுடன் அறைக்கு சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும், IT ஊழியரான வந்தனா திவிவேதி 10 ஆண்டுகளாக நிகாமை காதலித்து வந்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.