மன்னார் வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை ; மூளைச்சாவடைந்தவரின் இரு சிறுநீரகங்கள் தானம்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற இந்த உறுப்பு தானத்தின் மூலம், மூளைச்சாவடைந்தவரின் இரு சிறுநீரகங்களும் நீண்டகாலமாக சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த இருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் இருவருக்கும் புதிய வாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த மகத்தான மனிதநேயப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறுப்பு தான செயல்முறையை வெற்றிகரமாக முன்னெடுத்த வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.