யாழில் யுவதியை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை; காணொளியால் அதிர்ச்சி
யாழ் சுதுமலை பிரதேசத்தில் மனநிலை சரியில்லாத ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பெண்ணை தாக்கியவர்கள் கஞ்சா மற்றும் மாவாப் போதைக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் பெண்ணை தாக்கியவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் எனவும் , பொதுமக்களை அச்சுறுத்தி வாள் வெட்டுக்களையும் மேற்கொண்டு வருபவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இந் நிலையிலேயே அவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட யுவதியை கட்டி வைத்து சித்திரவதை செய்த காணொளி வெளியான நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலகள் வலியுறுத்தி வருகின்றனர்.