முல்லைத்தீவில் தாக்குதலுக்குள்ளான இளைஞன் தப்பியோட்டம்!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சின்னராசா லோகேஸ்வரன் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த தாக்குதல் முயற்சியில் இருந்து தப்பிய சின்னராசா லோகேஸ்வரன் பாதுகாப்பான இடம் ஒன்றில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இவர் தற்போது முல்லைத்தீவுப் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கரைதுரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சின்னராசா யோகேஸ்வரன், முல்லைத்தீவில் பெண்கள் மற்றும் பலரை அவதூறாக சமூக வலைதளங்களில் போலி முகநூல் கணக்குகள் ஊடாக அவதூறு பரப்புவதாக கூறி பிரதேச இளைஞர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காணஒளி வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் நள்ளிரவில் சிக்கிய இளைஞன்; பரபரப்பு வீடியோ