விடுதியில் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த இளைஞன் : பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் இந்த விடுதிக்கு வந்து,
மாலை 6 மணி அளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக விடுதிக்கு கூறியுள்ளார்.
பொலிஸார் விசாரணைகள்
ஆனால் அவர் வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டு அறையை பார்த்த போது, சம்பந்தப்பட்ட இளைஞன் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படி மஹரகம பொலிஸ் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து சோதனையிட்ட போது ஹோமாகம பிரதேசத்தில் விஷம் அருந்தி உயிரிழந்த நபரின் இறுதி சடங்கிற்காக இந்த நபர் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் 34 வயதுடையவர் ஆவார்
மேலும் இறந்த இடத்தில் விஷம் அடங்கிய பை, தண்ணீர் போத்தல் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.