திருமணத்துக்கு மறுத்த சிறுமிக்கு புதுமாப்பிள்ளை செய்த மிக கொடூர செயல் ; அதிர்ச்சியில் உறைந்த கிராமம்
தெலங்கானாவில் நிச்சயிக்கப்பட்ட பின்னர் திருமணத்துக்கு மறுத்த சிறுமியை புதுமாப்பிள்ளை கத்தியால் குத்திச் கொலை செய்த சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் வாராசிகுடா அருகே பாபூஜி நகரில் தங்கி கட்டட வேலை செய்து வந்த தம்பதியினரின் மூத்த மகளுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பவித்ராவுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம்
இதையடுத்து அண்மையில் சிறுமியின் சொந்த அத்தை மகனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தத்துக்கு முன்பு அந்த இளைஞர் மிகவும் நல்லவர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார்.
அதன் பின்னர் மது போதைக்கு அடிமையான உமாசங்கர், சாம்பாதிக்கும் பணத்தை எல்லாம் சூதாட்டத்திலேயே தொலைத்துள்ளார். அதை அறிந்து அச்சம் கொண்ட பெண் வீட்டார், திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இளைஞர் உமாசங்கர் அடிக்கடி பெண் வீட்டிற்கு சென்று அனைவரையும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் பவித்ரா, அவரது தாயாருடன் வீட்டில் இருந்துள்ளார். அங்கு, சென்ற இளைஞர் சிறுமியை தனியாக அழைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரத்தில் இருந்த உமாசங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பவித்ராவின் கழுத்தில் பலமுறை குத்தியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறி துடித்துள்ளார்.
2 குழந்தைகளின் தாயினால் காதலனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; இறுதியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த லட்சுமி, தனது மகள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். அருகில் இருந்தவர்களும் வந்ததை பார்த்து உமாஷங்கர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
பின்னர், அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிய பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.