இலங்கையில் பெரும் சோகம் : மகளின் தாக்குதலில் பரிதாபமாக பலியான தந்தை
காலி - வந்துரம்ப - கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இறந்த தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது மகளால் தாக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அப்போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் அவரது மகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
22 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை 54 வயதானவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.