நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கம் விலை
புத்தாண்டு பிறந்தது முதல் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று (3) தங்கம் விலை சற்று குறைந்துள்ளமையானது நகை வாங்க காத்திருந்தோரிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூபாய் 5915.00 என விற்பனையாகிறது.
அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 குறைந்து ரூபாய் 47320.00 என விற்பனையாகி வருகிறது.
24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6385.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 51080.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளியின் விலை
ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து கிராம் ஒன்றுக்கு ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.