மது பிரியர்களுக்கு வெளியான கவலை தரும் தகவல் ; உயர்த்தப்படும் விலை
மதுபான போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மதுபானங்களின் விலையையும் உயர்த்துவதற்கு மேற்படி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விலை உயர்வு 1-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மதுபான உற்பத்தி
காலியான போத்தல்களை உற்பத்தி செய்யும் நிறுவனம், தமது உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்து, 750 மி.லீ காலியான போத்தலொன்றுக்கு 160 ரூபாவையும், 375 மி.லீ அர அரைப் போத்தலுக்கு 140 ரூபாவையும், 180 மி.லீ கால் போத்தலுக்கு 109 ரூபாவையும் கட்டணமாக உயர்த்தியுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் "கல்" (Gal) மதுபான போத்தலொன்றுக்கு மதுபான விற்பனை நிலையங்களினால் (Wine Stores) இதுவரை அறவிடப்பட்ட 60 ரூபா வைப்புத் தொகை (Deposit) 100 ரூபா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரைப் போத்தலுக்கான வைப்புத் தொகை 40 ரூபாவிலிருந்து 70 ரூபாவாகவும், கால் போத்தலுக்கான வைப்புத் தொகை 20 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலியான போத்தல்களை மீண்டும் பொறுப்பேற்காத நிறுவனங்கள், மதுபானத்தின் விலையுடனேயே போத்தலின் மேலதிகச் செலவையும் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் அறவிட நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன்படி, 750 மி.லீ "கல்" மதுபான போத்தலின் புதிய விலை, 100 ரூபா வைப்புத் தொகையுடன் சேர்த்து 3,800 ரூபாவாக உயர்ந்துள்ளது.
மதுவரி உயர்த்தப்படாவிட்டாலும், காலியான போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளதால், அந்தப் சுமையை நுகர்வோரிடமிருந்து அறவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.