அமெரிக்கா இடைக்கால தேர்தல்; டிரம்ப் தோல்வி; செனட் சபையை கைப்பற்றும் ஜனநாயக கட்சி !
அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலான செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளுக்கான போட்டியில் ஜனநாயக கட்சி முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் ஆளும் கட்சியான டிரம்ப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் நடைபெறும் பாராளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

தேர்தல் களத்தில் முக்கியக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், பல முக்கியத் தொகுதிகளிலும் இடங்களிலும் ஜனநாயகக் கட்சி (Democratic Party) முன்னிலை வகித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனநாயக் கட்சி செனட் சபையில் 45 இடங்களையும், குடியரசுக் கட்சி 34 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவு
அதேநேரம் பிரதிநிதிகள் சபையில் 64 இடங்களை ஜனநாயக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், குடியரசுக் கட்சி 29 இடங்களையே பெற்றுள்ளது. அதற்கமைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது.
அமெரிக்க அரசியல் அமைப்பில் இடைத்தேர்தல் என்பது ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் பாதியில் நடத்தப்படும் மிக முக்கியமான ஜனநாயகச் சோதனையாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் இந்த முன்னிலை மற்றும் தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் காலங்களில் நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.

அமெரிக்க பாராளுமன்ற இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி முன்னிலை வகிப்பது அந்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முழுமையான இறுதி முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் களம் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளது.