அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி ; தொலைபேசி அழைப்பால் கணவருக்கு காத்திருந்த ஷாக்
காலி- கராபிட்டிய பகுதியில் நேற்று (3) அதிகாலை 25 வயதுடைய மருத்துவ மாணவியொருவர் ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிந்தோட்டை பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையை பரிசோதிப்பதற்காக நேற்று காலை வந்த ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவரே வீதியோரத்தில் கிடந்த இந்த பெண் சடலத்தை முதலில் பார்த்துள்ளார்.

விசேட விசாரணை
பின்னர் அவர் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதன் போது இளம் பெண்ணின் சடலத்திற்கு அருகில், அவரது தொலைபேசி ஒலித்துள்ளதுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த அழைப்பிற்கு பதிலளித்த போது பெண்ணின் கணவர் பதிலளித்த நிலையில், மரணம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணவனின் வாக்குமூலத்தின்படி, இந்த மரணத்திற்கு முன் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு மனக்கசப்பு இருந்ததாகவும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மர்ம மரணத்திற்கான காரணம் இதுவரை உறுதியாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதுடன் பொலிஸார் தற்போது விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலத்திற்கான பிரேத பரிசோதனை இன்று (4) கராப்பிட்டிய வைத்தியசாலையில் நடைபெற உள்ளதுடன், காலி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.