யாழில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்கள்: கைவரிசையை காட்டிய நபர்கள்!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் 36 இலட்சம் ரூபாய் பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு (13-06-2023) நயினாதீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நயினாதிவு 5 ஆம் வட்டார பகுதியில் நேற்று இரவு வீட்டில் இரண்டு பெண்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டுக் கூரையை உடைத்து கீழே இறங்கிய திருடர்கள் கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 22 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த பெண்கள் காலை வீட்டினுடைய அறையை திறந்து பார்க்கின்ற போது கைப்பை காணாமல் இருந்தமையால் அதிலிருந்து நகைகள் கைப்பையுடன் கொள்ளையடிக்கப்பட்டமை தெரிய வந்தநிலையில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.