28 வயதுடைய பெண்ணும் 47 வயது ஆணும் கைது
வத்தளை பிரதேசத்தில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
28 வயதுடைய பெண்ணொருவரும் 47 வயதுடைய ஆணொருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் வத்தளை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
கைதான ஆண் புகைப்பட கலைஞராக பணிபுரிந்து கொண்டே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 250 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த 5 இலட்சம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.