ஆப்கானில் பெண்களின் உரிமை; உலக நாடுகள் விட்டுக்கொடுக்ககூடாது!
ஆப்கானிஸ்தான் தலிபான்களில்ன் ஆட்சியில் உள்ள நிலையில் உலக நாடுகள் ஆப்கான் பெண்களின் கல்வியை காப்பாற்ற முன்வரவேண்டும் என நோபால் பரிசுபெற்ற மலாலா யூசுசப்சாய் (Malala Yousafzai)வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலிபான் ஆப்கானை கைப்பற்றியதை தொடர்ந்து பெண்களின் உரிமை தொடர்பான விடயத்தில் உலக நாடுகள் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யக்கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஆப்கானில் 20வருடங்களிற்கு முன்னர் செயற்பட்டது போன்று தலிபான்கள் மீண்டும் செயற்படுவார்கள் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது மற்றும் மனித கௌரவத்தை பாதுகாப்பது ஆகிய விடயங்களில் நாங்கள் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்துவிடமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வழங்கிய உறுதிமொழியை பின்பற்றி ஆப்கானில் பெண்கள் கல்வி பாதிக்கப்படுவதை உறுதி செய்வது எங்கள் கடமை எனவும் இந்த உரிமைகளில் முக்கியமானதொன்று கல்விக்கான உரிமை எனவும் மலாலா யூசுசப்சாய் (Malala Yousafzai) தெரிவித்துள்ளார்.