தொண்டைமானாறு கடலில் மீட்கப்பட்ட சடலம்; மேலதிக தகவல்
யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.
நேற்று மாலை (12) மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வந்த மீனவர்கள் கடலில் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
ஆலயத்துக்கு சென்ற மகள் திரும்பவில்லை
சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, அச்சுவேலி, தோப்பூரை சேர்ந்த பெற்றோர், அச்சுவேலி பொலிஸ் நிலையம் சென்று, தமது மகள் வீடு திரும்பவில்லையென முறையிட்டனர்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு சென்ற மகள் திரும்பவில்லையென முறைஇஆப்டு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு சென்ற இராசசிங்கம் சுபாசினி (40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ள சமபவ்ம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.