உலகையே வியக்க வைத்த தூக்கப் போட்டி ; 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 இலட்சம் பரிசு வென்ற பெண்
தூங்குவதற்காகவே இலட்சக்கணக்கான ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் போட்டியில் பங்கேற்று, 60 நாட்களில் 9.6 இலட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளார்.
நவம்பர் 14இல் இலங்கையை தாக்க வருகிறது புதிய தாழமுக்கம்? ; பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஜீனியா சட்டர்ஜி. வேக்ஃபிட் (Wakefit) நிறுவனம் ஏற்பாடு செய்த இந்த வித்தியாசமான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அவர் இந்தியாவின் 'ஸ்லீப் சாம்பியன்' (Sleep Champion) பட்டத்தையும் தனதாக்கியுள்ளார்.
குறித்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். பல கட்டத் தேர்வுகளுக்குப் பின்னர் அவர்களில் 10 பேர் மாத்திரமே இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற இப்போட்டியில் பங்கேற்பாளர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்குவதுடன், தங்களது தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் தொடர்பான விபரங்களையும் பதிவு செய்ய வேண்டியிருந்தது.
போட்டியாளர்களின் தூக்கப் பழக்கங்கள் மற்றும் செயல்திறனுக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தரவரிசை தயாரிக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, 'ஸ்லீப் சினிமா', 'ஸ்லீப் பிங்கோ' மற்றும் 'அண்டர்கவர் ஸ்லீப் மிஷன்' உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான வாராந்திர சவால்களும் போட்டியின் ஒரு பகுதியாக இடம்பெற்றன.
இறுதிச் சுற்றில் வீட்டு அலங்காரம் மற்றும் படுக்கையறை வசதிகளை ஏலத்தில் எடுப்பது உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட ஜீனியா சட்டர்ஜி முதலிடத்தைப் பெற்று வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கமைய, அவருக்கு 9.6 இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தூக்கத்தின் முக்கியத்துவத்தை வித்தியாசமான முறையில் எடுத்துரைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டி இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.