4வது கணவரால் மனைவிக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் ; உயிர் பிரிந்தது தெரியாமல் நடந்த சம்பவம்
இந்தியாவில் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்த ஒரு கடுமையான வாக்குவாதத்தில் பெண் ஒருவர் அவரது 4-வது கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மதப்பாக்கத்தில் உள்ள காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார்.

கடுமையான வாக்குவாதம்
அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்ததுடன் 5 வருடங்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மற்றொரு நபருடனும் சிறிது காலம் வாழ்ந்து,பிறகு பிரிந்துவிட்டார்.
அதன்பின் நான்காவதாக ஒருவரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை கொடூரமாகத் தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த மனைவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மது போதையில் இருந்த கணவர், மனைவி இறந்ததுகூட தெரியாமல் இருந்து மறுநாள் காலையில் மனைவி இறந்ததை அறிந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.