பூட்டிய வீட்டிற்குள் வெட்டுகாயங்களுடன் பெண்ணின் சடலம் ; மர்ம மரணத்தால் பரபரப்பு
பதுளை - கந்தேகெதர - கெடவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் வீடொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூடப்பட்டுள்ளதாக, நேற்று (26) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வெட்டுக் காயங்கள்
அதற்கமைய, குறித்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் ஹாலிஎல - கெடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.