யாழில் போதனா வைத்தியசாலையில் மன்னார் சிறுவன் பலி ; கொழும்பிற்கு செல்லும் உடற்கூற்று மாதிரிகள்
மன்னார், கொல்லன்குளம் - வீரன்குளத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் காய்ச்சல் மற்றும் வலிப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவராத நிலையில், மேலதிக பரிசோதனைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

காய்ச்சல் மற்றும் வலிப்பு
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த சிறுவனுக்கு கடந்த நவம்பர் 24ஆம் திகதி காய்ச்சல் மற்றும் வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுவன் நவம்பர் 25ஆம் திகதி மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், மேலதிக சிகிச்சைக்காக அன்றைய தினமே சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (26) குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.