அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராகும் தமிழ் வம்சாவளிப் பெண் ; வரலாறு படைத்த நித்யா ராமன்
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (Nithya Raman), தற்போதைய மேயர் கரேன் பாஸை (Karen Bass) தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேயராகத் தேர்வாகியுள்ள முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை நித்யா ராமன் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன்
அவர் டிசம்பர் மாதம் மேயராகப் பொறுப்பேற்க உள்ளார். நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில், நித்யா ராமன் 52.7 சதவீத வாக்குகளையும், கரேன் பாஸ் 47.3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளதாக வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக சோசலிச அமைப்பின் ஆதரவைப் பெற்ற நித்யா ராமன், வீடற்ற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், குறைந்த வாடகையிலான வீடுகளை அதிகரித்தல், பொதுப் போக்குவரத்து மற்றும் நகர்ப்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கேரளாவில் பிறந்த நித்யா ராமன், தனது ஆறு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகமான எம்.ஐ.டி (MIT) ஆகியவற்றில் கல்வி பயின்று நகர்ப்புறத் திட்டமிடலில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபை உறுப்பினராகப் பணியாற்றிய அவர், தற்போது மேயர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளார்.
குறிப்பாக, 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பதவியில் இருந்த மேயர் ஒருவர் மீண்டும் தேர்தலில் தோல்வியடைந்துள்ள முதலாவது சந்தர்ப்பமாகவும் இந்தத் தேர்தல் அமைந்துள்ளது.