தொப்புள் கொடி கூட அறுக்கவில்லை ; ஈவிரக்கமின்றி பச்சிளம் சிசுவை வீசிய விமான பணிப்பெண்!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் நீலாங்கரை வீட்டின் அருகே,முன்னாள் விமான பணிப்பெண் தொப்புள் கொடி கூற அறுக்காத சிசுவை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை வீசப்பட்ட சம்பவத்தில் 34 வயதான முன்னாள் விமான பணிப்பெண் அகான்ஷா லால் என்பவரை காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றையதினம் (5) வியாழக்கிழமையன்று முதலமைச்சரின் இல்லத்திற்கு பின்புறம் குழந்தை அழும் சத்தம் கேட்டு நீலாங்கரை பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத குழந்தை
தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் மீட்கப்பட்ட குழந்தை, உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை தற்போது நலமாக இருப்பதாகவும், குழந்தை நலக்குழுவின் பராமரிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் வசித்து வந்த லக்னோவை சேர்ந்த அகான்ஷா லால் என்பவரை கண்டறிந்தனர்.
வீட்டின் பிரசவித்த குழந்தையை வைத்திருப்பதற்கு பெற்றோர் எதிர்த்ததால், நிலைகுலைந்த அவர் குழந்தையை கைவிட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மனநல ஆலோசனை வழங்க காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலுதவி செய்து உடனடியாக குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுத்த தவெக அரசின் காவல்துறைக்கும், நீலாங்கரை பொதுமக்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.