கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை
வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (29) புதன்கிழமை அதிகாலை பாதுக்கை, வட்டருக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதுக்கை, வடருக்க பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் தனது வீட்டிற்கு முன்னாள் உள்ள அறையொன்றிற்குச் சென்ற போது சந்தேக நபரொருவர் இவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகமை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.