இந்தியாவிலிருந்து ஜனாதிபதி அநுரவிற்கு வந்த முக்கிய கடிதம் ; கூறப்பட்ட விடயம்
'டித்வா' (Ditwah) புயலுடன் திடீரெனத் தோன்றிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட பின்னர், இலங்கை அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், ஒரு நம்பகமான பங்காளியாகவும், உற்ற நண்பனாகவும் இந்தியா சாத்தியமான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஊடாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்தியப் பிரதமர் அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோளோடு தோள் நிற்போம்..
இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், மீள்திறனை உறுதி செய்வதிலும், கடந்த காலத்தைப் போலவே நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம் என அக்கடிதத்தில் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியா எப்போதுமே இலங்கையின் பக்கம் நிற்பதை உங்களால் காண முடியும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடிதத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.