பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்பட்ட இயந்திரம்... பரிதாபமாக உயிரிழந்த பெண்!
நுவரெலியா - ஹங்குராங்கெத்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது கல் ஒன்று வீழ்ந்ததில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் ஹேவாஹெட்ட - ரொக்வூட் தோட்டப் பகுதியில் கடந்த 13-11-2024 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹேவாஹெட்ட - ரொக்வூட் தோட்டப் பகுதியில் கடந்த 13ஆம் திகதி பாதுகாப்பற்ற முறையில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட பணியின் போது கல் ஒன்று வீழ்ந்ததில் பெண் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பெண் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த பெண்ணுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும், இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் தோட்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி ரொக்வூட் தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, இன்று 4வது நாளாகவும் மக்களால் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.