விஹாரமகாதேவி பூங்கா தேரர்கள் போராட்டம் ; ஆட்சியாளர்களை தண்டிக்கக்கோரி சூனிய வழிபாடு
விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் ஒரு கட்டமாக செவ்வாய்க்கிழமை (20) மாலை வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை விளித்து சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்களைத் தண்டிக்குமாறும், அவர்களின் ஆட்சிப் பலத்தை உடைக்குமாறும், மூன்று மாதங்களுக்குள் தற்போதைய ஆட்சியைப் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கும் வகையிலான சூனியம் செய்யும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

தண்டனை நடவடிக்கை
புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்க யக்ஷப் படைகளை அனுப்புமாறும், ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமென்றும்.

மேலும், இலங்கையில் புத்த சாசனம் நிலைத்திருப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறும் தேவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் வகையில் இந்த பூஜைகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.