விமல் மனைவி விவகாரம்; தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவிற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலியான தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் சஷி வீரவன்சவை குற்றவாளியாக அறிவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
அதற்கமைய, சஷி வீரவன்சவிற்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தீர்பை எதிர்த்து அவரின் சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி
விமல் வீரவங்சவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மனைவி தொடர்பான செய்தி
