இரகசிய தகவலால் சிக்கிய போதை வியாபாரி ; தமிழர் பகுதியில் சம்பவம்
நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை பொலிஸ் தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகம்புர பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (9) கைதானார்.
அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் சிறிது காலமாக ஈசி பண பரிமாற்றம் மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர் வசம் இருந்து 3.500 கிராம் ஹெரோயின் மற்றும் 2.100 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைத்தொலைபேசி போதைப்பொருளை விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
