நள்ளிரவில் ஊரையே அலறவிட்ட பெண் ; நித்திரையில் இருந்த கணவனுக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்
நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28) என்பவருக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது.
கத்தினால் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன்...
2 ஆண்டுக்கு முன் தினேஷ் மீது அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தார். அப்போது பொலஸார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் தான் 'அய்யோ, அம்மா' என்ற கதறல் சத்தம் கேட்டு அயலவர்கள் பலர் எழுந்து ஓடிவந்து கதவு திறந்த போது தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. “அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன்.
அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள். நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.
மருத்துவமனையில் இருந்தே தன் மனைவி மீது பொலிஸில் புகார் அளித்தார். தினேஷின் மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவரது மனைவியிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.