நீதிமன்ற காணொளியில் திடீரென வந்த ஆபாச படங்களால் அதிர்ச்சி! வழக்கு விசாரணைகள் நடுவே சம்பவம்
டெல்லி உயர்நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடந்துஒண்டிருந்தபோது திட்ரயில் திடீரென ஆபாச படங்கள் ஒளிபரப்பானமை அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்துவது வழக்கம். அந்தவகையில் நேற்று மட்டும் 180 வழக்குகள் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தன.

சைபர் தாக்குதல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்
தலைமை நீதிபதி தேவேந்திர குமார் மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று வழக்கு ஒன்றைக் காணொளி வாயிலாக விசாரித்தனர். கணினியுடன் இணைக்கப்பட்ட திரையில் வழக்குடன் தொடர்புடையவர்கள் தோன்றிச் சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரெனத் திரையில் அதிகச் சத்தத்துடனும் இரைச்சலான இசையுடனும் ஆபாச வீடியோக்கள் ஒளிபரப்பாகின. இதனால் அதிர்ச்சியடைந்த நீதிமன்ற ஊழியர்கள், உடனடியாகக் கணினி இணைப்பைத் துண்டித்தனர்.
சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டபோது, மறுபடியும் ஆபாச வீடியோ ஒளிபரப்பானது. விசாரணை நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியபோது, "உங்கள் கணக்கு ஹேக் (Hack) செய்யப்பட்டது" என்ற குறிப்பு திரையில் தோன்றியது. அடுத்தடுத்து ஏற்பட்ட இத்தகைய இடையூறுகளால் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணை முழுமையாக நிறுத்தப்பட்டது.
இந்த சைபர் தாக்குதலால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இது குறித்து நீதிமன்ற நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நீதிமன்ற அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் தனது திரையைப் பகிர்ந்து (Screen Share), ஆபாச வீடியோக்களை இயக்கியது தெரியவந்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட இந்த சைபர் தாக்குதல் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.