அம்பாறையில் காட்டு யானை மரணம் ; காரணம் என்ன? பொலிஸார் தீவிர விசாரணை
காட்டு யானை ஒன்று உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆஸ்பத்திரி சேனை – கண்டம் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்றின் சடலம் உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்ட நிலையில் புதன்கிழமை (24)யானையின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் காரணத்தை அறிவதற்காக குறித்த இடத்திற்கு வருகைதந்த அதிகாரிகள் யானையின் உடலை மீட்டுள்ளதுடன் யானை உயிரிழந்தமைக்கான காரணம் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் இறக்காமம் பொலிஸார் இணைந்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.