போதைப்பொருள் விற்பனையில் மனைவி ; கணவர் தப்பியோட்டம்
கம்பஹா, கணேமுல்ல, கெந்தலியத்த பகுதியில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மனைவி கைதுசெய்யப்பட்ட நிலையில் கணவன் தப்பிச் சென்றுள்ளதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கை
இந்த சோதனை நடவடிக்கையின் போது வீட்டின் உரிமையாளரான கணவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரது மனைவி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து 1 கிலோ 270 கிராம் ஐஸ், 410 கிராம் ஹெரோயின், 5 இலட்சத்து 9 ஆயிரம் ரூபா பணம், 6 கையடக்கத் தொலைபேசிகள், 7 வங்கி கணக்கு புத்தகங்கள், பொலிஸ் சீருடைகள், 36 தேசிய அடையாள அட்டைகள் , இலத்திரனியல் தராசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.