“பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா!
களைநெல் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த முறையும் அதிக விளைச்சல் தரும் “பரசூட்”முறையில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் அறுவடை விழா உருத்திரபுரம் பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகில் கு.விநாயகமூர்த்தி என்ற விவசாயின் வயலில் நடைபெற்றது.
உருத்திரபுரம் விவசாயப் போதனாசிரியர் நா.மகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் பா.தேவரதன் கலந்து கொண்டார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக விதை மற்றும் நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதிப்பணிப்பாளர் இ.சஞ்சீவன்,கிளிநொச்சி கிழக்குப் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் கை.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் த.யோகேஸ்வரன், பாடவிதான உத்தியோகத்தர்கள் ,விவசாய போதனாசிரியர்கள் ,உருத்திரபுரம் கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.