2026 மின்சார யுகம் ; JLR மின்சார வாகனங்களின் புதிய காலம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) வாகனங்களை, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் உள்ள புதிய தொழிற்சாலையில் நேற்று (9) முதல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது.
சுமார் 9,000 கோடி ரூபாய் முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பசுமைத் தொழிற்சாலை (Greenfield Plant), வருடத்திற்கு 2.5 இலட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து முதன்முதலாக Range Rover Evoque சிற்றூந்து இன்று வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது.

இந்தத் திட்டம் சுமார் 5,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JLR நிறுவனம் 2026 ஆம் ஆண்டை தனது மின்சார வாகனப் புரட்சிக்கான ஆண்டாக அறிவித்துள்ளது.
Range Rover Electric : JLRஇன் முதல் முழுமையான மின்சார SUV ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 600 கி.மீ (WLTP) வரை பயணிக்கும் திறன் கொண்ட இது, 800V அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும்.
Jaguar GT EV : ஜாகுவார் பிராண்டின் மறுபிறப்பாகக் கருதப்படும் இந்த 4-கதவு கொண்ட சொகுசு சிற்றூந்து, 700 கி.மீற்றருக்கும் அதிகமான மைலேஜ் மற்றும் 1000 HP வரையிலான அதிரடி ஆற்றலைக் கொண்டிருக்கும். இது புதிய JEA (Jaguar Electric Architecture) கட்டமைப்பில் உருவாக்கப்படுகிறது.