தாயின் தகாத உறவு; 5 நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகள்! சம்பவத்தால் ஷாக்
இந்தியா பெங்களூரில் உள்ள ஒரு 5 நட்சத்திர விடுதியில் இரு குழந்தைகள் சடலமாகவும், அவர்களின் தந்தை படுகாயங்களுடனும் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
40 வயதான இம்ரான் மற்றும் அவரது இரு மகள்கள் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, குழந்தைகள் கட்டிலில் சடலமாகக் கிடந்தனர். இம்ரான் கழுத்து அறுபட்ட நிலையில் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை
விடுதி ஊழியர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இம்ரான் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“என் குழந்தைகள் இப்படிப்பட்ட தாயுடன் வளர்வதை நான் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களைக் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என அவர் காவல்துறையினரிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இம்ரான் தன் மகள்களின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துத் தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பெங்களூரு நாகவாரா பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.