பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான பெண் ஒருவர், தனது கணவரைக் கடத்தி, பாதி தலை முடியையும் மீசையையும் சிரைத்து, செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு, கடந்த 2023 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

தகராறு
இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பது நரேந்திரனுக்குத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது மற்றொரு கணவரான முன்னா யாதவ் என்பவருடன் சேர்ந்து நரேந்திரனைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி நரேந்திரனை ஒரு வீட்டிற்குள் வரவழைத்துச் சிறைபிடித்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணின் தூண்டுதலின் பேரில், நரேந்திரனின் பாதி தலையையும், பாதி மீசையையும் அவர்கள் சிரைத்துள்ளனர்.
மேலும், அவருக்குச் செருப்பு மாலை அணிவித்து, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பரப்பி விட்டுள்ளனர்.