போதைப்பொருள் கடத்தல்காரரை தேடிச்சென்ற பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை - முள்ளிப்பொத்தனை பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை முற்றுகையிட முயற்சித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவருகையில்,
ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக தம்பலகாமம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்டபோதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கைதான நபர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.