20 வயது யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம்
இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை யுவதி மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான சனிக்கிழமை (15) மாலை யுவதியுடன் சென்ற இளைஞர் அப்பர் வேவல்கட்டி தோட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவதி கீழ் இறத்கங்க பிரிவைச் சேர்ந்த மோகன்ராஜ் பேபி ஷானி (20) என கூறப்படுகின்றது.
[pSK8OLE ]
யுவதி கொலை செய்யப்பட்டாரா?
யுவதியின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டுபிடித்ததன் பின்னர் அங்கு யுவதியின் காதலன் என கூறப்படும் நபர் சென்று வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. சந்தேக நபர் அணிந்திருந்த றப்பர் கைப்பட்டி இறந்த யுவதியின் கையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதோடு குறித்த நபர் யுவதியைக் காதலித்து வந்தார் என்ற விடயத்தை யுவதியின் தங்கை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இவர் லெல்லுப்பிட்டி, பானகொடை தோட்டத்திற்குத் தப்பிச்சென்றிருப்பதாகவும் அவரைக் கைதுசெய்ய வேவல்வத்தைப் பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரைக் கைதுசெய்ய வலியுறுத்தி இன்று காலை கம்பி அடி – செட்டிக்கடை பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.