இதற்கு மேல் நகர முடியாத நிலையில் இலங்கை! IMF பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
இலங்கை இதற்கு மேல் நகர முடியாத நிலை சர்வதேச நாணய நிதியம் (IMF) அதிகாரிகள் மேற்கொள்ளும் முடிவுகளின் அடிப்படையில், ஏனைய நாடுகளின் உதவிகளை பெற முடியுமா, முடியாதா என்பதை தீர்மானிக்கலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேடமாக சர்வதேச நாணய நிதியம் அதிகாரிகள் நேற்றைய தினம் (29-06-2022) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார பிரச்சனை மற்றும் மக்கள் முகம் கொடுக்கின்ற சிக்கல் குறித்து IMF அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம்.
மேலும், எரிபொருள் பற்றாக்குறை, மருந்துகள் தட்டுப்பாடு, உணவு பற்றாக்குறை போன்ற பிரச்சனைகள் குறித்து நாங்கள் கலந்துரையாடினோம்.
உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், அன்றாடம் உணவு இன்றி இருப்பவர்களிற்கும் உதவுவதற்கான ஆர்வம் அவர்களிடம் உள்ளது.
அரசியல் ரீதியில் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்கள் பேசவில்லை. கால வரையை பற்றி எந்த தகவலும் வழங்க வில்லை என தெரிவித்துள்ளார்.
நாடு இதற்கு மேல் நகர முடியாத நிலை காணப்படுகிறது. அரசாங்கம்தான் இதற்கு முடிவு வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.