மாத்தறையில் பகீர் கிளப்பிய சம்பவம்... நபரொருவர் தாக்கி கொலை செய்த குடும்பம்!
மாத்தறை பிரதேசத்தில் மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணாமாக ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (16-03-2024) காலை வெலிகம - உயன்கந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெலிகம - உயன்கந்தவில் இரண்டு சுற்றுலா விடுதிகளுக்கு அண்டிய கடற்கரைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த நபரை தாக்கியுள்ளனர்.
மேலும், அப்போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் அவர் உயிரிழ்ந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.