நாடாளுமன்ற சம்பவம் பின்னணி ; பொலிஸ் அதிகாரியின் அதிர வைத்த வாக்குமூலம்
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமாரவுடன் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (28) கொலோன்ன பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், தனது உயிருக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து இரத்தினபுரி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கடந்த 26 ஆம் திகதி முன்வைத்த எழுத்துமூல முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே வருகை தந்ததாகக் குறிப்பிட்டார்.

தன்னைத் தாக்கிய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்கள் சுதந்திரமாக நடமாடுவது தனது மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தான் பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.