மீண்டும் சிலாபம் - கோட்டை தொடருந்து சேவைகள் ஆரம்பம்
அதிதீவிர வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த புத்தளம் தொடருந்து மார்க்கத்தில் , கொழும்பு - கோட்டைக்கும் சிலாபத்திற்கும் இடையிலான தொடருந்து சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
நாத்தாண்டிய வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள், திருத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் இன்று முதல் சிலாபம் வரை முன்னெடுக்கப்படவுள்ளன.

தொடருந்து நேர அட்டவணை (28.12.2025 முதல்)
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை (காலை நேர அலுவலக தொடருந்துகள்)
காலை 04.20க்கு புறப்பட்டுக் காலை 07.05 க்கு சென்றடையும்.
காலை 04.50க்கு புறப்பட்டுக் காலை 07.40க்கு சென்றடையும்.
காலை 05.30க்கு புறப்பட்டுக் காலை 07.30க்கு சென்றடையும்.
காலை 05.50க்கு புறப்பட்டுக் காலை 08.20க்கு சென்றடையும்.
காலை 06.10க்கு புறப்பட்டுக் காலை 09.00க்கு சென்றடையும்.
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் வரை (மாலை நேரத் தொடருந்துகள்)
மாலை 04.30, 04.45, 05.18, 06.10 மற்றும் 07.10 ஆகிய நேரங்களில் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் வழமை போல சிலாபம் வரை பயணிக்கும்.