யாழ்.மாதகல் பகுதியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் எடை 81 கிலோகிராம்
யாழ்ப்பாணம், மாதகல் குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் இன்று (27) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 81 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவப் பங்களிப்புடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறித்த பரிசோதனையில், சுமார் 45.5 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், சுமார் 35.7 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினருடன் இணைந்து கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.