திருமணமான ஆண்களிடம் பாலியல் ஈடுபாடு குறைவு ; உளவியல் ஆய்வில் தகவல்
திருமணமான ஆண்களிடையே அண்மைக்காலமாக பாலியல் ஈடுபாடு குறைந்து வரும் போக்கு காணப்படுவதாகவும், இது குடும்ப வாழ்க்கை மற்றும் தம்பதியருக்கு இடையிலான பரஸ்பர உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ஆங்கில தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நவீன வாழ்க்கை முறையில் அதிகரித்துள்ள மன அழுத்தம், பொருளாதார நெருக்கடிகள், அதிக பணிச்சுமை மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு உள்ளிட்ட காரணிகள் இந்த நிலைமைக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாத பட்சத்தில், நீண்டகால அடிப்படையில் தம்பதியருக்கு இடையிலான உறவில் பாதிப்புகள் ஏற்பட்டு, குடும்ப முறிவுகளுக்கும் வழிவகுக்கும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தம்பதியினர் தங்களுக்கிடையிலான பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தொடர்பில் திறந்த மனதுடன் கலந்துரையாடுவது முக்கியம் எனவும், தேவையான சந்தர்ப்பங்களில் உரிய தொழில்முறை ஆலோசனைகளை நாடுவது பயனுள்ளதாக அமையும் எனவும் குறித்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.