டிரம்பை கொல்லப்போகிறோம்;ஈரானில் அதிர்ச்சி அளிக்கும் பேனர்கள்
அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வோம் என ஈரான் தலைநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. பல மாதங்களாகியும் தற்போது வரை போர் நின்றபாடில்லை. இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த இரண்டு மாதங்களாக ஈரான் மீது அமெரிக்கா எந்த தாக்குதலையும் நடக்காத நிலையில் நேற்று ஈரானில் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது.
ஹார்மூஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள இந்த தீவில் நேற்று அமெரிக்க தாக்குதல் நடத்தியது. அதேநேரம் அது சிறிய அளவிலான தாக்குதல்தான் என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனாலும் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தரையிலிருந்து வான் பரப்பை தாக்கும் திறன் கொண்ட ஈரானின் ஏவுகணையை அமெரிக்க தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அமெரிககவுக்கு எதிராக ஈரான் மக்கள் போரட்டத்தில் குதித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்வோம் என ஈரான் தலைநகர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.