யாழில் பாடசாலைப் பைக்குள் காத்திருந்த ஷாக் ; சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைப் பையினுள் சூட்சுமமாக மறைத்து எடுத்துவரப்பட்ட 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய நபர் ஒருவர் யாழ்ப்பாணம், அனலைதீவில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து பயணிகள் படகு மூலம் அனலைதீவுக்குக் குறித்த மதுபானத்தைக் கடத்திவர முற்பட்ட வேளையில், பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர் அனலைதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் பூவரசன்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.