தவெக ஆட்சியை கவிழ்க்க 30 கோடி பேரம்
தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக இரண்டும் இணைந்து கூட்டிச்சதியில் ஈடுபவதாக தவெக மதுரை எம்.எல்.ஏ முஸ்தபா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இன்று காலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முஸ்தபா ‘திமுகவும், அதிமுகவும் இணைந்து ஒருவேளை பார்த்துக் கொண்டிருக்கிறது.
திமுகவும், அதிமுகவும் 30 கோடி பேரம்
தவெக வெற்றி பெறாது என திமுகவும், அதிமுகவும் நினைத்தது. ஆனால், தவெக வெற்றி பெற்று நல்லாட்சியை கொடுத்து வருகிறது. ஆனால் அதைக் கெடுக்க திமுகவும், அதிமுகவும் முயற்சி செய்து வருகிறது.
தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் திமுகவும், அதிமுகவும் ஈடுபட்டு வருகிறது.
குதிரை பேரத்தில் எனக்கே செல்போன் அழைப்பு வந்தது. நாங்கள் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களியுங்கள். முதலில் 15 கோடி தருகிறோம். அதன்பின் 15 கோடி என மொத்தம் 30 கோடி தருகிறோம் என கூறினார்கள்.
இது குறித்து நான் தலைமையிடமும் கூறியிருக்கிறேன். திமுக, அதிமுகவால் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாமல் போனதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பார்க்கிறார்கள்.
மதுரையை சேர்ந்த ஒரு அதிமுக நிர்வாகிதான் என்னை தொடர்பு கொண்டு இப்படி பேசினார். தவெக எம்.எல்.ஏக்கள் 100 கோடி கொடுத்தாலும் வர மாட்டார்கள்.. இதை யார் செய்கிறார்கள் என்பது இன்னும் சில நாட்களில் வெளியே வரும்’ என்று அவர் கூறியிருக்கிறார்