இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்
எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி அனுர குமார கூறியுள்ளார்.
டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நேற்று(30) ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,

நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம்
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம்.
முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும்.
எனவே, நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம். இந்த கண்ணீர் விடும் இந்த அழகிய தேசத்தை குணப்படுத்துவோம் . சுபீட்சமான நாட்டை உருவாக்குவோம்.
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம்.
முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது. நாளாபக்கங்களிலிருந்தும் முழு நாடும் நீரில் மூழ்கி பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது மிகவும் கடினமான ஒரு செயற்பாடாகும்.
இந்த கொடூரமான இயற்கை பேரழிவினால் நமது சிறிய தீவை உலுக்க முடிந்தாலும், இந்த நாட்டு மக்களின் மனிதநேயத்தையும் உறுதியையும் எந்த வகையிலும் அசைக்க முடியாது என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
எனது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்துடன், இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம்.
அன்பான பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, இந்தப் பேரழிவில் இறந்த அனைவரையும் மீண்டும் உயிர்ப்பிக்க முடிந்தால், எந்த சூழ்நிலையிலும் அதைச் செய்வதற்கு நாங்கள் இருமுறை யோசிக்க மாட்டோம்.
ஆனால் நாம் யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்தவர்கள் தொடர்பான வேதனை என்றென்றும் எம்முடன் இருக்கும். இறந்தவர்கள் அனைவரும் நமக்கு ஒரு இலக்கம் அல்ல.
ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பெயர், ஒரு முகம் மற்றும் ஒரு கதை உள்ளது. இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.