இலங்கையில் சிக்கிய இந்தியர்கள் நாட்டுக்கு அனுப்பிவைப்பு
ditwah புயலால் கொழும்பு விமானநிலையத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி திருவனந்தபுரத்திற்கு 247 பயணிகளுடன் IL 76 விமானமும், டெல்லிக்கு(ஹிண்டன்) 76 பயணிகளுடன் C130J விமானமும் கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளன.
அதேபோல் வணிக விமானங்கள் மூலம் சிக்கித் தவிக்கும் பயணிகளை மேலும் வெளியேற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.

இந்திய தூதரகம் கொழும்புவில் சிக்கித் தவிக்கும் இந்திய பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது, மேலும் அவர்கள் வீடு திரும்புவதற்கான விரைவான பயணத்தை எளிதாக்குகிறது.
மேலும் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் சிக்கித் தவிக்கும் எந்தவொரு இந்திய பயணியும் அவசர உதவி மைய எண் +94 773727832 ஐத் தொடர்பு கொள்ளலாம் அல்லது கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது செயல்படும் விமான நிறுவன கவுண்டர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.